இலங்கை

சதொச நிறுவனத்தினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறைப்பு!

இன்று முதல் சதொச நிறுவனம் 6 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 210 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ பெரிய வெங்காயம் 14 ரூபாவால் குறைக்கப்பட்டு 115 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ சிவப்பு பருப்பு 11 ரூபாவால் குறைக்கப்பட்டு 314 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளை சீனி 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 229 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ கடலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டு 545 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளை நாடு 04 ரூபாவால் குறைக்கப்பட்டு 175 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Back to top button