ஏனையவை

தித்திக்கும் சுவையில் பாசிப்பயறு பாயாசம்!

பாயாசம் என்றாலே விரும்பி சாப்பிடும் ஒன்று தான். அதிலும் சைவ சாப்பாடு செய்து சாப்பிடும் வேளையில் பாயாசம் இல்லை என்றால் அது குறையாக தான் இருக்கும். ஆகவே வீட்டில் இருக்கும் சில இலகுவான பொருட்களை வைத்து எவ்வாறு சுவையானதொரு பாசிப்பயறு பாயாசம் செய்து சாப்பிடலாம் என்ற பார்க்கலாம்!!

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு – 1 கப்

வெல்லம் – 1 கப் (துருவியது)

நெய் – 2 தே.கரண்டி

கெட்டியான தேங்காய் பால் – 1 கப்

நீர் போன்ற தேங்காய் பால் – 2 1/2 கப்

முந்திரி – 3 தே.கரண்டி

உலர் திராட்சை – 3 தே.கரண்டி

ஏலக்காய் – 4

செய்முறை

ஒரு பாத்திரத்தில் 1 தே.கரண்டி நெய் சேர்த்து சூடாக்க வேண்டும். அதனுடன் முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து வறத்தெடுக்க வேண்டும். பின் பயறையும் நன்றாக வறுத்தெடுக்க வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் நீர் போன்ற தேங்காய் பாலை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் ஏலக்காய் சேர்த்து பருப்பு வேகும் வரை கொதிக்கவிட வேண்டும். 15 நிமிடம் கழித்து வெல்லத்தை சேர்த்து 5நிமிடம் கிளறி எடுக்க வேண்டும். இறுதியில் கெட்டியான தேங்காய் பாலை சேர்த்து 1 தே.கரண்டி நெய் மற்றும் வறுத்த முந்திரி, உலர் திராட்சையை சேர்த்து கிளறி எடுத்தால் இனிப்பான பாசிப்பருப்பு பாயாசம் தயார்!!

Back to top button