இலங்கை

நாட்டில் கையடக்க தொலைபேசி வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!

தற்போது அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியை கருத்திற்கொண்டு, தற்போதைய கையடக்க தொலைபேசி விலைகளை 20 வீதத்தினால் குறைக்க இலங்கை தொலைபேசி விநியோகஸ்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக கடந்த மாதங்களில் கையடக்க தொலைபேசியின் கொள்வனவு 40 வீதத்தால் குறைந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் புதிய கையடக்க தொலைபேசியை வாங்காமல், பழைய தொலைபேசிகளை பழுதுபார்த்து பயன்படுத்த பழகிவிட்டனர் என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலரின் விலை அதிகரிப்புடன் கைத்தொலைபேசிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. ஆனால் தற்போது அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ள நிலையில், கையடக்கத் தொலைபேசிகளுக்கான கேள்வி மீண்டும் அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும், டொலர் விலை மீண்டும் அதிகரித்தால், கையடக்கத் தொலைபேசி விலைகளும் அதிகரிக்கும். அத்துடன் இலங்கையை பொறுத்தவரையில், கையடக்கத் தொலைபேசி அல்லது துணைக்கருவியின் உள்ளூர் உற்பத்திகள் மேற்கொள்ளப்படுவதில்லை. எனவே ஒவ்வொரு பாகங்களையும் சீனா, சிங்கப்பூர் அல்லது துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டியுள்ளது என்று சமித் செனரத் தெரிவித்துள்ளார்.

Back to top button