உடல்நலம்

இந்த மூலிகைச் செடியால் நோய் எல்லாம் வந்த இடம் தெரியா போயிரும்!

நமது வீட்டு தோட்டங்களில் பல மூலிகைகளை அவற்றின் மகத்துவம் தெரியாமல் வளர்த்து வருகின்றார்கள். வீடுகளில் வளர்க்கப்படும் ஒரு மூலிகையாக “கற்பூரவள்ளி” செடி காணப்படுகிறது. இது பெரியவர் முதல் சிறியவர்கள் வரை பயனுள்ளதாக அமையும். பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள் ஆகியவை உள்ளன. இது ஒருவரின் சரும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இந்த இலையை சாதாரணமாக நினைக்காமல் இதை சாப்பிட்டு வந்தால் உடல் ரீதியாக பல நன்மைகளை பெறலாம். அப்படி ஒரு இலையால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்க போகின்றது என்று இந்த பிதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.

ஜலதோஷம்

ஒரு பாத்திரத்தில் கற்பூரவல்லி இலையை போட்டு சூடாக்க வேண்டும். அதன் சாற்றை பிழிந்து எடுத்து, நெற்றி, மார்பில் தடவினால் சளி வெளியேறும்.

பூச்சி கடி

கற்பூரவள்ளி சாற்றை பூச்சி கட்டித்த இடத்தில் இந்த இலையின் சாற்றை பூசலாம். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் அரிப்பை தடுக்கும். சிறிய காயங்கள், கீறல்களிலும் இது பயனுள்ளதாக இருக்கும்.

மூட்டுவலி

இலைகளை அரைத்து அதன் சாற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் வலி குறையும். இதன் சாற்றையும் அருந்தினாலும் நல்லது. மூட்டுவலி படிப்படியாக குறைந்து வரும்.

செரிமானம்

கற்பூரவள்ளி இலைகளை சாற்றாக எடுத்து குடித்து வந்தால், வயிறு தொடர்பான சிக்கல் மற்றும் மலச்சிக்கல், வாயு பிரச்சினை என்பவை குறைவடையும். இவ்வாறு உடல் ரீதியாக தினமும் நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் இருந்து எம்மை பாதுகாக்க இதை குடித்து வந்தால் நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button