உடல்நலம்

எமது உடல் தசைவலியைப் போக்கும் சுவையான பூண்டு, தக்காளி துவையல் – செய்வது எப்படி?

நாம் முன்னோர்கள் காலத்திலிருந்து சமையலில் பூண்டை பயன்படுத்தி வருகிறோம். பூண்டில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. தினமும் சமையலில் பூண்டு சேர்த்து சாப்பிட்டால் கர்ப்பப் பையில் உள்ள அழுக்கு நீங்கும். உடலில் ஏற்படும் தசைவலி குறையும். உடம்பில் உள்ள கொழுப்பு கரைந்து ஆற்றல் பெருகும். இரவில் சரியான தூக்கம் வரவில்லையென்றால், பாலில் மூன்று பூண்டை சேர்த்து சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.

இவ்வளவு நன்மைகள் நிறைந்த பூண்டு தக்காளியை வைத்து நாம் ஒரு சூப்பரான துவையல் செய்வோம்….

தேவையான பொருட்கள்

முழு பூண்டு – 3

தக்காளி – 2

சிவப்பு மிளகாய் – 4

தாளிக்க நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை – சிறியது

செயல்முறை

முதலில் தக்காளியை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர், கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சிவப்பு மிளகாயைப் போட்டு வதக்க வேண்டும். பின்னர், பூண்டு போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். இதன் பிறகு தக்காளியைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும். தேவையான உப்பு சேர்த்து இந்த கலவையை நன்றாக ஆற விட வேண்டும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து எடுக்க வேண்டும். பின்னர், ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சிறிது கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, இந்த பூண்டு கலவையை அதனுடன் சேர்த்தால், சுவையாக பூண்டு தக்காளி துவையல் ரெடி.

Back to top button