இலங்கை

நாட்டில் வேகமாக பரவும் புதிய நோய் தொற்று தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு!

இலங்கையில் நீர் மற்றும் மண்ணின் ஊடாக பரவும் பக்டீரியா ஒன்றினால் மண் காய்ச்சல் எனப்படும் நோய் பரவி வருவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (20.06.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் பேராசிரியர் இனோகா இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த நோய் அதிகளவு உயிரிழப்பை ஏற்படுத்தும் என்றும்,மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டம், வடமேல் மாகாணத்தின் புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்நோய் பதிவாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போதைய மழையுடனான காலநிலையில் நீர் மற்றும் மண்ணின் ஊடாக பரவும் பக்டீரியாவினால் இந்த மண் காய்ச்சல் நோய் பரவி வருவதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. பாதங்களில் ஏற்படும் காயங்கள், அழுக்கு நீர் போன்றவற்றின் ஊடாக இந்த பக்டீரியாக்கள் உள்நுழைவதாக வைத்தியர் எச்சரித்துள்ளனர்.

Back to top button