இலங்கை

நாட்டில் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்

இன்று இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 1,200 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடலில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கமானது 5.8 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கம் களுத்துறை, பாணந்துறை, பம்பலப்பிட்டி மற்றும் கொழும்பை சூழவுள்ள பல பகுதிகளில் சிறிதளவு உணரப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர். எனினும், இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை எனவும் , மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது

Back to top button