நாம் மூல நோயிலிருந்து விடுபட உதவும் முட்டைகோஸ் தோசை ருசியாக செய்வது எப்படி?
பொதுவாக நாம் அனைவரும் காலையிலும், மாலையிலும் டிபனாக தோசையை விரும்பி சாப்பிடுவது வழக்கம். ஆனால், தோசை ஒரே மாதிரி செய்து சாப்பிட்டால் போரடித்து விடும். கொஞ்சம் வித்தியாசமா முட்டைகோஸை வைத்து தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம் – முட்டை கோஸை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கோளாறு சரியாகும். மூல நோயை போக்கும். சருமத்தை பட்டுப்போல் மிளரச் செய்யும். எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும்.
தேவையான பொருள்கள்
அரிசி – 4 கப்
காய்ந்த மிளகாய் – 4
வெங்காயம் – 2
சீரகம் – 3 ஸ்பூன்
புளி – சிறியது
கொத்தமல்லி – தேவையான அளவு
முட்டைகோஸ் – 2 கப்
தேங்காய் துருவல் – 2 கப்
எண்ணெய் – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை – மாவு அடைக்க 4 கப் அரிசியை இரவில் ஊற வைத்து விட வேண்டும். காலையில் எழுந்ததும் அரிசியை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அந்த அரிசி மாவில் சீரகம், கொத்தமல்லி, தேங்காய் துருவல் புளி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை ஊற்றி, அதில் மெலிதாக நறுக்கி வைத்த முட்டை கோஸ் மற்றும் வெங்காயத்தை சேர்க்க வேண்டும். பின்னர், அடுப்பில் தோசைக் கல்லை வைத்து அதில் லேசாக எண்ணெய் தடவி, மாவை தோசையாக ஊற்ற வேண்டும். பின்னர், இருபுறமும் நன்றாக சிவந்து வந்ததும் தட்டில், சட்னியை வைத்து பரிமாறவும். சுவையான முட்டைகோஸ் தோசை ரெடி.