லண்டன்

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்கவைக்க Barge எனப்படும் முதல் படகு தயார்!

பிரித்தானிய அரசுபுகலிடக்கோரிக்கையாளர்களை ஹொட்டல்களில் தங்கவைப்பதால் ஆகும் செலவைக் குறைப்பதற்காக, அவர்களை மிதவைப்படகுகளில் தங்கவைக்க திட்டமிட்டுவருகிறது. Barge எனப்படும் இந்த மிதவைப்படகுகள்தான் இனி புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்குமிடமாக ஆக்கப்பட உள்ளன. பலவேறு தரப்பிலிருந்தும் இந்த மிதவைப்படகுத் திட்டத்துக்கு எதிர்ப்பு வந்தும், முதல் 50 புகலிடக்கோரிக்கையாளர்களை அடுத்த செவ்வாய்க்கிழமை படகில் ஏற்றியே தீருவது என அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, Bibby Stockholm என்ற பெயர் கொண்ட மிதவைப்படகு தயாராகிவிட்டது.

இதேவேளை, புகலிடக்கோரிக்கையாளர்களை அந்த மிதவைப்படகுகளில் தங்கவைப்பதற்கு எதிர்ப்பும் தொடர்ந்தவண்ணம் உள்ளது. தொண்டு நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த Nicola David என்பவர், அந்த மிதவைப்படகு 222 பேர் மட்டுமே தங்கும் வசதிகொண்டது என்றும், அதில் மிக அதிக எண்ணிக்கையிலானவர்கள் தங்கவைக்கப்பட இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளார். அத்துடன், படகில் லைஃப் ஜாக்கெட்கள் இல்லையென்றும், தண்ணீரில் நிற்கும்போது படகில் தீப்பற்றினால் எப்படி தீயை அணைப்பது என்பதுபோன்ற பிரச்சினைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், திட்டமிட்டபடி புகலிடக்கோரிக்கையாளர்களை அடுத்த செவ்வாய்க்கிழமை படகில் ஏற்றியே தீருவது என அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Back to top button