ஏனையவை

தேசியக்கொடியை டெல்லி செங்கோட்டையில் ஏற்றினார் பிரதமர் மோடி!

இன்று இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படும் நிலையில், டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. இதற்கு முன்னதாக ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அங்கிருந்து செங்கோட்டை சென்றதும், முப்படை மற்றும் டெல்லி போலீஸின் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து அவர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்ட மோடி, 21 குண்டுகுள் முழங்க தேசிய வணக்கம் செலுத்தினார்.

மேலும், ஹெலிகொப்டரில் இருந்து தேசியக் கொடிக்கு மலர்கள் தூவப்பட்ட நிலையில், பிரதமர் கொடியேற்றினார். இந்நிலையில் பிரதமர் டுவிட்டரில், சுதந்திர தின வாழ்த்துகள், சுதந்திர போராட்ட வீரர்களின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம், ஜெய்ஹிந்த் என பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடியின் உரை பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில், 2014 மற்றும் 2019ம் ஆண்டுகளில் மக்கள் வலுவான அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தியா நாட்டின் வளர்ச்சிக்கு உறுதியான அரசை மக்கள் எதிர்பார்க்கிறார்கள், என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்காக நல்ல மாற்றங்களை கொண்டு வந்தேன். ஊழல் என்ற தடையை நீக்கி நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்துள்ளோம். உலகத்துக்கே இந்தியா மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளது, 30 வயதுக்கு குறைவான இளைஞர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா. இன்றைய செயல்களின் தாக்கம் அடுத்த 1000 ஆண்டுகளுக்கு இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Back to top button