ஆன்மிகம்

வீட்டு வாஸ்துப்ப பிரச்சினைகளை நீக்கும் எளிய பரிகாரம்

இப்பிரபஞ்சத்தில் உள்ள திசைகளுக்கு வாஸ்து பலன்கள் உண்டு. அதற்கேற்ப நாம் வசிக்கும் வீடும் வாஸ்துப் படி இருந்தால் இன்புற்று வாழ முடியும். சில வேளைகளில் வாஸ்து தோஷம் இருப்பினும் வீட்டில் குழப்ப நிலை ஏற்பட்டு நிம்மதி சீர்கெடுவதற்கு வாய்பபுகள் உண்டு .

எனினும் தற்போது வேகமாக சுழன்றுக்கொண்டிருக்கும் இத்தரணியில் மக்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்திசெய்துக் கொள்ளும் பொருட்டு சிலர் சொந்த வீடுகளிலும் பலர் வாடி வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். ஆகவே அனைவரும் வாஸ்துப் படி அமையப்பெற்ற வீட்டில் வசிப்பதில்லை. இதனை எண்ணி சிலர் மன சஞ்சலத்திற்குள்ளாகுவதும் உண்டு. இனிமேல் வாஸ்துப் பிரச்சினைகள் பற்றி குழப்பமடையாமல் நிம்மதியான வாழ்க்கை முறைக்கு செய்யவேண்டிய எளிய பரிகாரம் பற்றிய விளக்கத்தை நோக்குவோம். வெள்ளிக்கிழமை நாளில் உங்கள் வீட்டிற்கு அருகாமையிலுள்ள அம்மன் ஆலயத்திற்குச் செல்லுங்கள். அம்மனுக்கு உகந்த நேரமான இராகு காலத்தில் செல்வது மேன்மையடையக் கூடியதாக இருக்கும்.

அப்படி செல்லும் போது பழுதற்ற அதாவது கொஞ்சம் கூட புள்ளி இல்லாத வாடாத நல்ல விலையிலுள்ள ஆறு எலுமிச்சைப் பழங்கள் வாங்கிச் செல்லுங்கள். அவற்றை அர்ச்சகரிடம் கொடுத்து அம்மனுடைய திருப்பாதத்தில் வைத்து உங்களின் சகல பிரச்சினைகளையும் கூறி அனைத்தையும் தீர்த்து வைக்குமாறு மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.பின்னர் அவற்றை நீங்களே வாங்கி எடுத்துக்கொண்டு அவற்றில் மூன்றை அம்மன் ஆலயத்திலுள்ள சூலாயுதத்தில் சொருகி விட்டு பின்னர் எஞ்சியுள்ள மூன்று எலுமிச்சைப் பழங்களை வீட்டிற்கு கொண்டு வந்து விடுங்கள்.

அவற்றில் ஒரு பழத்தை பூஜை அறையில் வைத்து விடுங்கள். மற்றைய இரு பழங்களையும் மஞசள் நிறத் துணியில் தனித்தனியேக் கட்டி நிலைவாசலுக்கு உட்புறமும் வெளிப்புறமும் கட்டி தொங்க விடுங்கள். அப்பழத்தை நிலைவாசலில் கட்டும்போது நிலைவாசலில் ஆணி அடிக்காது அதற்கு மேல் சுவற்றில் அடித்துக் கட்ட வேண்டும். இப்பரிகாரத்தை தொடர்ச்சியாக மூன்று மாத காலத்திற்கு வாரந்தோறும் செய்து வர வாஸ்து தோஷம் என அனைத்துப் பிரச்சனைகளும் படிப்படியாக விலகி விடும். இவ் எளிய பரிகாரத்தை கடைப்பிடித்து இன்புற்று வாழ்வோம்.

Back to top button