இந்திய அரசு போலி சிம் கார்டு பிரச்சினை தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கை
இந்திய அரசு போலி சிம்களை தடுக்க முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. சிம் விற்பனையாளர்களுக்கு பொலிஸ் சரிபார்ப்பு, பயோமெட்ரிக் சரிபார்ப்பு, பதிவு ஆகியவற்றை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்த சிம் விற்பனையாளர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு KYC கட்டாயமாக்கப்படும். மீறுபவர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். வணிக நோக்கத்திற்காகவும் குடும்ப உறுப்பினர்களுக்காகவும் ஒன்றாக சிம் எடுப்பவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது.
இந்நிலையில், புதிய நடவடிக்கைகளின் மூலம் போலி முகவரி மூலம் சிம் வர்த்தகத்தை தடுக்க முடியும் என நம்புவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். சஞ்சார் சதி போர்டல் தொடங்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். 52 லட்சம் இணைப்புகள் ரத்து செய்யப்பட்டன. போலி சிம்களை விற்ற 67,000 டீலர்கள் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். New Rules For SIM Verification, Sim Card, SIM verification, Police Verification, New Sim Card rules, Mandatory verification for SIM vendors 66,000 வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. போலி சிம் மீது 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருடப்பட்ட அல்லது தொலைந்து போன மூன்று லட்சம் கைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.