லண்டன்

வாடகை வீட்டில் குடியிருப்போரை சட்ட விரோதமாக வெளியேற்ற முயன்றால் கைது செய்ய லண்டன் பொலிசாருக்கு உத்தரவு

வாடகை வீடுகளில் குடியிருப்போரை சட்ட விரோதமாக வெளியேற்ற முயலும் வீடுகளின் உரிமையாளர்களைக் கைது செய்ய, லண்டன் பொலிசாருக்கு உத்தரவிடப்பட உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டில், தங்களை சட்ட விரோதமாக வீட்டு உரிமையாளர் வெளியேற்ற முயல்வதாக பொலிசாருக்கு 24 புகார்கள் வந்த நிலையில், இரண்டு வீட்டு உரிமையாளர்களைத்தான் பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளார்கள். மற்ற வழக்குகளில், ஒன்றில், வாடகை வீட்டில் குடியிருப்போர் வெளியேற்றப்படுவது சட்டப்படிதான் நடக்கிறது என்று கூறியுள்ளார்கள் பொலிசார், அல்லது, வீட்டின் உரிமையாளருக்கு ஆதரவாக அவர்கள் செயல்பட்டுள்ளார்கள். 11 வழக்குகளில், இது சிவில் வழக்கு என்று கூறி வழக்கில் தலையிடாமலே சென்றுள்ளார்கள் பொலிசார்.

ஆகவே, இனி வாடகை வீடுகளில் குடியிருப்போரை சட்ட விரோதமாக வெளியேற்ற முயலும் வீடுகளின் உரிமையாளர்களை, தேவைப்பட்டால் கைது செய்யலாம் என லண்டன் பொலிசாருக்கு உத்தரவிடப்பட உள்ளது. வீட்டின் உரிமையாளர் ஒருவர், வாடகைக்கு விட்டுள்ள வீட்டில், தன் இஷ்டப்படி வீட்டின் பூட்டை மாற்றினாலோ, வீட்டில் குடியிருக்கும் ஒருவரை பலவந்தமாக வீட்டை விட்டு வெளியேற்றினாலோ, எரிவாயு மற்றும் மின்சார இணைப்பைத் துண்டித்தாலோ. மிரட்டினாலோ, அது சட்டப்படி குற்றம் என வீட்டு உரிமையாளருக்கு பொலிசார் வெளிப்படையாகவே அறிவுறுத்தலாம் என்றும் புதிய விதிகள் கூறுகின்றன. ஆண்டொன்றிற்கு சுமார் 8,000 பேர், வாடகை வீடுகளில் குடியிருப்போர், தங்கள் வீடுகளை விட்டு சட்ட விரோதமாக வெளியேற்றப்படுவதாகவும் ,அவர்களில் சிலர் மட்டுமே அது குறித்து புகார் செய்வதாகவும், வாடகை வீடுகளில் குடியிருப்போர் ஆதரவு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Back to top button