இலங்கை
அடுத்த வருடம் முதல் கொழும்புடன் நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் அபுதாபி
அபுதாபி மற்றும் கொழும்பு கட்டுநாயக்கவுக்கு இடையிலான நேரடி விமான சேவை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இத்தகவலை அபுதாபியின் எயார் அரேபியா விமான சேவை அறிவித்துள்ளது. Air Arabia இதன்படி குறித்த நிறுவனமானது அபுதாபி மற்றும் கட்டுநாயக்கவுக்கு இடையில் வாராந்தம் மூன்று விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்கவுக்கும், திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கட்டுநாயக்கவிலிருந்து அபுதாபிக்கும் விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.