இலங்கைக்கு மீண்டும் வரும் சர்வதேச விமானசேவை
ஹொங்கொங்கில் இருந்து செயற்படும் கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் (Cathay Pacific Airlines) இலங்கைக்கான விமான சேவைகளை மீள ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, கேத்தே பசிபிக் நிறுவனம் 2024 பெப்ரவரி 2 ஆம் திகதி முதல் ஹொங்கொங்கிலிருந்து கட்டுநாயக்கவிற்கும் கட்டுநாயக்கவிலிருந்து ஹொங்கொங்கிற்கும் விமானங்களை இயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேத்தே பசிபிக் நிறுவனமானது, ஆசியா , வட அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவை உள்ளடக்கிய ஒரு சர்வதேச விமான நிறுவனம் ஆகும். இந்த விமான நிறுவனம் 139 விமானங்களைக் கொண்டுள்ளதுடன் மற்றும் 42 நாடுகளில் 182 இடங்களுக்கு சேவையில் ஈடுபடுகின்றது. கொரோனா தொற்று நிலைமை மற்றும் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளின் அடிப்படையில், கடந்த பருவத்தில் இலங்கைக்கான விமானங்களை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. ஹொங்கொங்கிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்ட கால விமானப் பங்காளித்துவத்தின் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.