இலங்கை
ஐ.நாவில் 64 பக்க அறிக்கையுடன் சரணடைந்த அசாத் மௌலானா
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த தகவல்களை வழங்கிய அசாத் மௌலானா ஒரு வலுவான சாட்சி எனவும், 64 பக்கங்களை கொண்ட ஆவணத்தை ஐ. நாவிடம் அவர் வழங்கியுள்ளார் எனவும் புலனாய்வு செய்தியாளர் எம். எம் நிலாம்டீன் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்கள் குறித்து லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பில் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ”அசாத் மௌலானா இலங்கையில் இருந்து தப்பி செல்லுகையில் இந்தியாவினூடாகவே சென்றுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் இந்தியாவிலும் அவரை கொலை செய்வதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.