இலங்கையில் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கு ஒப்புதல் அளித்த சுகாதார அமைச்சர்!
நாட்டில் மேலும் மூன்று தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் கண்டியில் இன்று (செப்.10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த ரம்புக்வெல்ல, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டார்.
தனியார் பல்கலைக்கழகங்களில் இடைநிலைப் பட்டங்கள் வழங்குவது தொடர்பாக அண்மைக்காலமாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், “மருத்துவப் படிப்புக்கு தகுதியான பல குழந்தைகள் உள்ளனர், ஆனால் நம் நாட்டில் 11 பல்கலைக்கழகங்கள் மட்டுமே உள்ளன, அவை போதுமானதாக இல்லை” என்றார். மேலும், இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பெற்றுள்ள உலகளாவிய அங்கீகாரம் பெற்ற மருத்துவப் பட்டங்கள் குறித்து வலியுறுத்திய அவர், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இலங்கை இதுபோன்ற மாணவர்களை உருவாக்க வேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளார். எனவே அதற்கு இணையான திட்டத்தை தயாரிக்க வேண்டும். சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையில் 3 தனியார் பல்கலைகழகங்களை உருவாக்க நான் அனுமதி அளித்துள்ளேன் என தெரிவித்தார்.