இலங்கை
G77 அரச தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபாவின் ஹவானா நகரில் இன்று (14) முதல் 16 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள G77 மற்றும் சீனா அரச தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று (13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதால், அவரது கீழ் உள்ள அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய,
- தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்
- சிறுவர், மகளிர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் அனூப பெஸ்குவல்
- பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய
- பாதுகாப்பு பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த உச்சிமாநாட்டில், வளரும் நாடுகளின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.