இலங்கை

நாட்டுக்குத் தேவையான எரிபாெருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை

நாட்டின் பொருளாதார நிலையில் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் தேர்தல் ஒன்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்தாலும் மக்களுக்கு தேவையான எரிபாெருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், விரைவில் தேர்தல் ஒன்று இடம்பெறுமா என சிலர் என்னிடம் கேட்கின்றனர். ஆனால் நாட்டின் பொருளாதார நிலையில் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் தேர்தல் ஒன்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்தாலும் மக்களுக்கு தேவையான எரிபாெருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்படும்.

அதனால் ஆரம்பாக நாங்கள் பொருளாதாரத்தை பலப்படுத்திக்கொண்டு, தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை தேடிக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் எந்தவொரு தேர்தலையும் நடத்த எங்களுக்கு முடியுமாக இருக்கும். அத்துடன் நாட்டில் இருக்கும் பழைய அரசியல் முறைமையில் நாட்டின் ஆட்சியை கைப்பற்றவோ அல்லது தொடர்ந்தும் நாட்டை முன்னுக்கு கொண்டு செல்லவோ முடியாது. ஜனாதிபதியும் இந்த விடயத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதனால் நாங்கள் புதிதாச சிந்தித்து, சர்வதேசத்துடன் இணங்கிச்செல்ல முடியுமான வகையில் எமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் எதிர்க்கட்சி தொடர்ந்தும் பழைய அரசியல் முறைமைகளையே செயற்படுத்தி வருகிறது. அவர்களின் செயற்பாடுகள் தற்காலிகமானதாகும். எதிர்க்கட்சிகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளால் நாடு மீண்டும் கஷ்ட நிலைக்கே செல்லும். இவர்களின் இவ்வாறான நடவடிக்கை காரணமாக எதிர்க்கட்சியில் இருக்கும் பிரதான அரசியல் கட்சி அடுத்துவரும் தமிழ் சிங்கள புதுவருடமாகும்போது நிலைத்திருக்க முடியாமல் இல்லாமல் போகும் என குறிப்பிட்டார்.

Back to top button