லண்டன்

ஆசிய நாட்டவரின் கடையை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட லண்டன் மக்கள்!

தெற்கு லண்டனின் பெக்காம் பகுதியில் அமைந்துள்ள ஆசிய நாட்டவரின் கடையை மொத்தமாக மூடிவிட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்புடைய கடையில் பதிவான காணொளி ஒன்று பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்த, அந்த கடை உரிமையாளர் தற்போது தலைமறைவாக உள்ளார் என்பதுடன், அவரது மூன்று பிள்ளைகளும் தற்போது பாடசாலைக்கும் செல்வதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 11 திங்கட்கிழமை பெண் ஒருவர் அந்த கடைக்கு சென்று அதன் உரிமையாளரான 45 வயது Sohail Sindho என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதாவது அந்த பெண்ணுக்கு கட்டணத்தைத் திருப்பித் தர முடியாது என Sohail Sindho மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் அவரது கடையில் இருந்து அழகு சாதனங்களை அள்ளிக்கொண்டு வெளியே செல்ல முயன்றுள்ளார். Sohail Sindho அவரை தடுத்து நிறுத்தியதுடன், கடையில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்காத நிலையில் இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்படுள்ளது.

ஒருகட்டத்தில் குறித்த பெண்ணின் கழுத்தைப் பிடித்து Sohail Sindho வெளியே தள்ள முயன்றுள்ளார். ஆனால் இந்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி, கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த பெண்ணை வெளியே தள்ள ஆப்பிரிக்க மக்கள் அதிகள் வாழும் பெக்காம் பகுதியில் நடந்த இச்சம்பவம், அப்பகுதி மக்களை மொத்தமாக திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தூண்டியுள்ளது. வாக்குவாதத்தின் நடுவே அந்த பெண் கூடை ஒன்றால் Sohail Sindho தலையில் தாக்க, அதன் பின்னரே அவர் கழுத்தைப் பிடித்து அந்த பெண்ணை வெளியே தள்ள முயன்றுள்ளார்.

வாடிக்கையாளர் ஒருவரின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் காட்சிகள் வெளியாகி, பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், பயந்து போன Sohail Sindho அதன் பின்னர் கடை திறக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

அத்துடன் தமது மூன்று பிள்ளைகளுடன் தலைமறைவாக உள்ளார் என்றே கூறப்படுகிறது. பொதுமக்கள் உண்மை என்னவென்று அறிந்து கொள்ள வேண்டும் எனவும், தாம் அந்த பெண்ணை தாக்கவில்லை எனவும் Sohail Sindho விளக்கமளித்துள்ளார்.

தமக்கும் தமது பிள்ளைகளுக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் இல்லை என்றால், நேரடியாகவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களிடம் சென்று விளக்கமளிக்க தாம் தயார் என Sohail Sindho குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதி மக்கள்

மேலும் தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், அமெரிக்காவில் இருந்தும் கூட தொலைபேசியில் அழைத்து திட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். சுமார் 8 பவுண்டுகள் மதிப்பிலான 3 விக்குகளுக்காகவே இந்த பிரச்சனை ஏற்பட்டது எனவும், விற்பனைக்கு பிறகு பணம் திருப்பித்தர முடியாது என குறிப்பிட்டிருந்தும் அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் Sohail Sindho தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அதே கட்டணத்தில் வேறு விக்குகளை வாங்கிச் செல்ல வாய்ப்பளித்ததாகவும் Sohail Sindho குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் விசாரணைக்கு பின்னர் 31 வயதான அந்த பெண் மற்றும் Sohail Sindho ஆகிய இருவரையும் பொலிசார் விடுவித்துள்ளனர். ஆனால் அவரது கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி தினமும் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Back to top button