உடல்நலம்

செரிமான பிரச்சினை தீர்வாகும் அற்புத சாதம்!

பொதுவாகவே நாம் அனைவரும் உடலுக்கு நன்மையை தரக்கூடிய உணவை தான் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று யோசிப்போம். அதிலும் பச்சை சார்ந்த காய்கறிகளை எடுத்துக்கொள்வதில் நன்மைகள் கிடைக்கும். அந்தவகையில் கறிவேப்பிலை ஒரு அற்புதமான பொருளாகும். இதை சாப்பிடுவதால் வயிறு, குடல் போன்றவை நன்கு சுத்தமாகி செரிமானமின்மை மற்றும் குடல் சம்பந்தமான பல்வேறு நோய்களில் இருந்து தீர்வு கிடைக்கும். ஆகவே உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் அற்புத சாதம் எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

உதிராக வடித்த சாதம் – 2 கப்

கடுகு, உளுந்து – தலா அரை டீஸ்பூன்

கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்

வேர்க்கடலை – தேவையான அளவு

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

நெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு

பொடிக்க

மிளகு, கசகசா – தலா 1 டீஸ்பூன்

சீரகம் – 2 டீஸ்பூன்

முந்திரி – 4

கறிவேப்பிலை – 1 கப்

தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 6

செய்முறை

முதலில் கறிவேப்பிலையை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.

பின் ஒரு பாத்திரத்தில் அதை வறுக்கவும்.

மிளகு, சீரகம், கசகசா, மிளகாய் வற்றல், முந்திரி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்தெடுக்க வேண்டும்.

அடுத்து வறுத்து வைத்த அனைத்து பொருட்களையும் பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

இறுதியாக அடுப்பில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து கடுகு, உளுந்து, வேர்க்கடலை, கடலைப் பருப்பு போட்டு தாளித்து, அதில் பொடித்த பொடி, சாதம், உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து இறக்கினால் சாதம் தயார்!

Back to top button