ஏனையவை

அடர்த்தியான முடி வளர வெண்டைக்காய் தண்ணீர்: இதை செய்தாலே போதும்!

ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு வெண்டைக்காய் தண்ணீர் மிகவும் உதவுகிறது. வெண்டைக்காய் சுவையான காய் மட்டும்மல்ல, கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் வெண்டைக்காயில் மிகுந்துள்ளன.

வெண்டைக்காய் தண்ணீரில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே, கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற மினரல்ஸ்கள் உட்பட அத்யாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இவையனைத்தும் கூந்தலை ஆரோக்கியமாக வளர உதவுகின்றன. இதை கூந்தலில் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
கூந்தல் வளர்ச்சிக்கு வெண்டைக்காய் தண்ணீர்

வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீரை தொடர்ந்து கூந்தலுக்கு பயன்படுத்தி வருவது கூந்தலின் வேர்களை வலுப்படுத்தி முடி உதிர்தலை தடுக்கிறது. வெண்டைக்காய் நீரில் காணப்படும் வைட்டமின் கூந்தல் ஆரோக்கியத்தை உள்ளிருந்து வலிமையாக்க செய்கிறது. வெண்டைக்காய் தண்ணீர் தலைமுடியை மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்றுகிறது.

வெண்டைக்காய் தண்ணீர் , அழற்சி எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் எரிச்சல்,அரிப்பு மற்றும் பொடுகு போன்றவற்றை போக்குகிறது. வெண்டைக்காய் தண்ணீரை கூந்தலுக்கு பயன்படுத்தும் போது உச்சந்தலையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதன் மூலம் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மயிர்க்கால்களை அடைந்து , கூந்தல் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. வெண்டை தண்ணீரை அடிக்கடி கூந்தலுக்கு பயன்படுத்துவதால் முடி தண்டுகள் வலுவூட்டப்பட்டு அவை சேதமடைவதைது குறைகிறது. வெண்டை நீர் தலைமுடிக்கு இயற்கையான பளபளப்பை அளிக்கிறது. இதன் மூலம் உங்கள் கூந்தல் ஆரோக்கியமானதாக காட்சியளிக்கும்.

Back to top button