நினைத்ததெல்லாம் நிறைவேற நரசிம்மரை வழிபடுங்கள்!
விஷ்ணுவின் அவதாரங்களில் 4வது அவதாரம் நரசிம்ம அவதாரமாகும்.
தன் பரமபக்தனான பிரகலாதனைக் காத்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம்செய்ய எடுத்த அவதாரமே நரசிம்மம் என்பது தொன்ம நம்பிக்கை.
இந்த அவதாரத்தின்போது சிங்கத்தின் தலையுடனும், மனித உடலுடனும் விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்தார்.
மற்ற அவதாரங்கள் அனைத்தும் திட்டமிட்டு நடந்தவை. ஆனால் நரசிம்ம அவதாரம் அப்படி அல்ல. அது தன் பக்தனை காக்க ஒரே நொடியில் தோன்றிய அவதாரமாகும்.
இதன் காரணமாக மற்ற அவதாரங்களுக்கும், நரசிம்ம அவதாரத்துக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. நரசிம்மரிடம் சரண் அடைந்தால் பக்தர்கள் வைக்கும் வேண்டுதல்கள் அனைத்தும் உடனே நிறைவேறும் என்பது ஐதீகமாகும்.
எனவேதான் “நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை” என்பார்கள். எத்தனையோ தெய்வங்களிடம் வேண்டுதல் வைத்து முறையிட்டு, எதுவும் நடக்காமல் சலிப்படைந்தவர்கள், நரசிம்மரிடம் சரண் அடைந்து நினைத்தது நிறைவேற காண்பார்கள்.
எனவே நரசிம்மர் தனது பக்தர்களைத் தக்க சமயத்தில் காத்து அருளும் கடவுளாக கருதப்படுகிறார்.