மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக வயிறு வலியிலிருந்து விடுதலை பெற இதோ சூப்பர் டிப்ஸ்!
பொதுவாகவே பெண்களுக்கு மாதவிடாய் வலியானது மாதம் மாதம் ஏற்படும் ஒரு பிரச்சினையாகும். இந்தவலியானது இயற்கையானது.
இப்படி பதின்ம வயது பெண் குழந்தைகளில் ஆரம்பித்து வேலைக்கு செல்லும் பெண்கள் வரை எல்லோருக்குமே இந்த வலியானது அதிகமாக காணப்படுகின்றது.
இதனால் அவர்களது அன்றாட வேலைகளானது பாதிக்கப்படுகின்றது. ஆகவே வீட்டு வைத்தியம் அசெயள்து இந்த வலியை எப்படி போக்கலாம் என தெரிந்துக்கொள்வோம்.
ஏன் மாதவிடாய் காலங்களில் வலி ஏற்படுகிறது?
ஒவ்வொரு மாதமும் தமது கருப்பையில் குழந்தை நிற்க வேண்டும் என்பதற்காக யூட்ரஸ் அந்த பகுதியை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுவதற்கான செயல்பாடுகளை செய்து கொண்டே இருக்கும். அதற்காக அடுக்காக அடுக்காக லைனிங்கை உருவாக்கி வைத்திருக்கும்.
இந்த அடுக்கில் தான் உள்ளே வரும் கரு(கருமுட்டை மற்றும் விந்தணு சேர்ந்து)சென்று சேர்ந்து ஊட்டச்சத்தோடு வளர ஆரம்பிக்கும்.
இதுவே அந்த கரு வரவில்லை என்றால் இரண்டு வாரங்கள் வரை இந்த அடுக்கானது காத்திருக்கும். பின்னர் அதுவாகவே மாதவிடாயாக வெளியேறும்.
இந்த ரத்தம் வெளியேறும் போது அதை சுருக்கி விரித்து வெளியே தள்ளும் வேலையை இந்த தசைப்பகுதி செய்கிறது. அப்போது PROSTAGLANDIN என்ற ஹார்மோன் வெளியாகிறது. இதனால்தான் நமக்கு வலி ஏற்படுகிறது.
வீட்டு வைத்தியம்
நல்லெண்ணையை சூடாக்கி வயிற்றில் தேய்த்துக்கொள்வது நல்லது.
Mild to Moderate அளவில் உடற்பயிற்சி செய்வதும் பலன் தரும்.
யோகா, Zumba நடனம் போன்றவையும் செய்யலாம்.
Endorphin hormone அதற்கு உதவும்.
தினமும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும்.
3-4 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
கீரை காய்கறிகளை சாப்பிடலாம்.
சோடா, காபி, ஆல்கஹாலை தவிர்க்க வேண்டும்.