ஏனையவை

இப்படி தேங்காய்ப்பாலில் சுவையான பிரியாணி செய்து பாருங்க!

பொதுவாகவே பிரியாணி என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். தினமும் சாம்பார், குழம்பு, ரசம், பொரியல் என்று சாப்பிட்டு போர் அடித்து இருக்குமே. ஆகவே வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்து எப்படி சுவையான தேங்காய்ப்பால் பிரியாணி செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையானவை

பாசுமதி அரிசி- 1 கப்

தேங்காய்ப் பால் – 1 கப்

வெங்காயம் – கால் கப்

சின்ன உருளைக்கிழங்கு (வேக வைத்து தோலுரித்தது) – 1 கப்

பச்சை மிளகாய் – 3

பட்டை – ஒரு துண்டு

ஏலக்காய், கிராம்பு – 1

நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு

நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு


செய்முறை

முதலில் ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்துக் கொள்ள வேண்டும்.

பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

அடுத்து உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

பிறகு 10 நிமிடம் ஊற வைத்து தண்ணீர் வடித்து நெய்யில் வறுத்த அரிசியைப் போட்டு நன்கு கலந்து தேங்காய் பால் சேர்க்கவும்.

இறுதியாக வேக விட்டு 1 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான தேங்காய்ப்பால் பிரியாணி தயார்!

Back to top button