இலங்கை

நாட்டில் பல வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம்: வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் சிக்கலான சூழ்நிலையில் இயங்கி வரும் பல மருத்துவமனைகள், கிராமப்புற மருத்துவமனைகள் மற்றும் மத்திய மருந்தகங்கள் அடுத்த இரண்டு வாரங்களில் மூடப்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மீதமாக இருக்க வேண்டிய மருத்துவர்களின் எண்ணிக்கையை விட குறைவாக உள்ள வைத்தியசாலைகள், மருந்துகள் இல்லாத வைத்தியசாலைகள், ஆய்வக பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாத வைத்தியசாலைகளில் வைத்தியர்களை தங்க வைப்பதில் பயனில்லை என சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், மூடப்படும் அபாயத்தில் உள்ள சிறிய மருத்துவமனை குறித்து அடுத்த இரு வாரங்களில் சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டு தேவையான தகவல்கள் சேகரிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை கோழைத்தனமாக யாராவது கருதினால் அதற்கு பதிலளிக்க தயாராக இருப்பதாக செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Back to top button