இலங்கை ஏற்றுமதி வருமானம் குறித்து மத்திய வங்கி வெளியிட்ட தகவல்
கடந்த ஓகஸ்ட் மாதத்திலேயே 2023 ஆம் ஆண்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகூடிய ஏற்றுமதி வருமானம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 1,119 மில்லியன் டொலர்களாக ஏற்றுமதி வருமானம் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
ஆனால் இது கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஈட்டிய ஏற்றுமதி வருமானத்துடன் ஒப்பிடுகையில் 8.7% வீழ்ச்சியாகும் என இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டின் 2023 ஆண்டில் தற்போது வரையான ஏற்றுமதி வருமானம் 8,010 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 10.1% வீழ்ச்சியாகும். சர்வதேச சந்தையில் ஆடைகளுக்கான தேவை குறைந்தமையே ஏற்றுமதி வருமானம் குறைந்தமைக்கான பிரதான காரணம் என இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.