இயற்கையான முறையில் மாதவிடாய் சீக்கிரம் வர… இனி மாத்திரை வேண்டாம்!
மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு இரத்தப்போக்கு அதிகரிக்கும் அல்லது குறையும் மற்றும் மனஅழுத்தங்கள் அதிகரிக்கும்.
ஒரு சில பெண்களுக்கு மாதவிடயானது மாதங்களாக தள்ளிப்போகும். இதை சரிசெய்ய ஒவ்வொருவர் வைத்தியரிடம் சென்று பரிசோதித்து பல மாத்திரைகளை உட்கொள்வார்கள்.
அது தான் தவறான ஒரு விடயம். மாத்திரைக்கு உடம்பு பழகிவிட்டால் உடம்பானது சீக்கிரம் பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பது உண்மையாகும்.
ஆகவே இயற்கையான முறையில் எப்படி வீட்டில் இருந்தப்படியே மாதவிடாய் வர செய்யலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
பப்பாளி
பப்பாளி பழத்தை தினமும் எடுத்துக்கொள்வதால் மாதவிடாய் சீக்கிரம் வரும். உங்களுக்கான திகதி தாண்டிவிட்டால், தொடர்ந்து 7 நாட்கள் பப்பாளி பழம் சாப்பிட்டால் போதும்.
கொத்தமல்லி விதை
கொத்தமல்லி விதைகள் மாதவிடாய் சீக்கிரம் வர உதவுகின்றது. ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை ரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீர் ஒரு கப் வரும் வரை வைத்து பின் குடித்தால் நல்லது.
இஞ்சி டீ
இஞ்சியின் குணநலம் கருப்பையை சுற்றி வெப்பத்தை அதிகரிப்பதாகும். இஞ்சி டீ அல்லது இஞ்சி சாறுடன் தேன் கலந்து அருந்தலாம். ஒருவேளை வயிற்று புண் இருந்தால் எரிச்சலை ஏற்படுத்தும். ஆகவே அவதானத்துடன் எடுத்துக்கொள்ளவும்.
எள்
மாதவிடாய் வருவதற்கு ஒரு சிறந்த தீர்வாக இருப்பது இந்த எள். சூடான நீரில் ஒரு தேக்கரண்டி எள்ளை சேர்த்து அருந்தினால் போதும்.
மேலும் பாதாம், அன்னாசி, தயிர் மற்றும் திராட்சை சாறு என்பவற்றை தினமும் எடுத்துக்கொள்வது சிறந்த ஒன்றாகும்.