ஏனையவை

Coffee Jelly… பால் மட்டும் இருந்தால் போதும்!

காபி என்பது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு பானமாகும். காபி பிரயர்கள் என்று ஒரு பட்டாளமே இருகின்றது. அந்தவகையில் இன்றைய தினம் சர்வதே காபி தினம் கொண்டாடப்படுகின்றது. ஆகவே வீட்டில் இருந்துக்கொண்டே காபி தினத்தை காபி தூள் வைத்து எப்படி கொண்டாடலாம் என தெரிந்துக்கொள்வோம்.

காபி ஜெல்லி தேவையான பொருட்கள்

ஜெல்லி பவுடர் – 25 கிராம், தண்ணீர் – 5 கப், சர்க்கரை – அரை கப், காபித் தூள் – 2 டேபிள் ஸ்பூன், கிரீம் தயாரிக்க பால் – 400 மி.லி,. கண்டென்ஸ்டு மில்க் – 300 மி.லி., கிரீம் – 250 கிராம் ,காபித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஜெல்லி பவுடரையும் சர்க்கரையையும் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும். பின் அதை அடுப்பில் வைத்து காய்ச்சு எடுக்கவும். அடுத்ததாக ஜெல்லியை ஆறவைத்து தேவையான வடிவில் வெட்டிக் கொள்ளவும். பிறகு ஒரு டம்ளரில் தேவையான அளவு காய்ச்சிய பால், கிரீம், கண்டென்ஸ்டு மில்க், காபித்தூள் சேர்த்து கலக்கவும். இறுதியாக ஜெல்லி துண்டுகளைச் சேர்த்து ஃபிரிட்ஜில் வைத்துப் பரிமாறலாம்.

Back to top button