ராகு பெயர்ச்சியால் ஏற்படும் சிக்கல்… மோசமான விளைவுகளை சந்திக்கப்போகும் 4 ராசிக்காரர்கள் இவர்கள் தான்! யார் யாரெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
பொதுவாக கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவதுடன், ஜோதிடத்தில் நிழல் கிரகமாக ராகு கருதப்படுகின்றது.
ராகுவின் தசா மற்றும் மஹாதசா ஒரு நபரை முற்றிலும் அழிக்கிறது என்று நம்பப்படுகிறது. ராகு தனது தற்போதைய ராசியில் இருந்து விலகி, அக்டோபர் 30ஆம் தேதி மீன ராசிக்குள் நுழைவார்.
மீனத்தை ஆளும் கிரகம் குரு ஆகும். இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமற்றதாக கருதப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், ராகு சஞ்சாரத்தின் போது எந்தெந்த ராசிக்காரர்கள் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.
மேஷம்
யாராவது வந்து அனாவசியமாக உங்களை வம்புக்கு இழுத்து பேசினாலும் இன்று நீங்கள் கொஞ்சம் அமைதியாக தான் இருக்க வேண்டும். அவசரப்பட்டு சண்டைக்கு போனால் கெட்ட பெயர் உங்களுக்குத்தான் வரும். உங்கள் பொறுமையை சோதிக்கும் காலம் இன்று. ஆகவே உஷாராக இருந்துக்கோங்க. வம்பு சண்டைக்கு போகவே போகாதீங்க.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல வளர்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். அலுவலகத்தில் உங்களை நம்பி முக்கியமான பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அவர்களுடைய நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அயராது உழைத்து அந்த வேலையை முடித்து கொடுங்க. உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்ததெல்லாம் நல்லபடியாக நடக்கும். மனது சந்தோஷமாக இருக்கும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வரக்கூடிய பிரச்சனைகளை சமாளிக்க சில முயற்சிகளை மேற்கொள்வார்கள். உறவுகளின் அருமை பெருமைகளை புரிந்து கொள்ளக்கூடிய நாள் இது.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் வேலை அதிகமாக இருக்கும். நிறைய வேலை செய்த செய்து சோர்ந்து போவீங்க. தலைவலி வரும். முக்கிய முடிவுகளை எடுப்பதாக இருந்தால் நாளை நிதானமாக சிந்தித்து எடுக்கவும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள உடம்பை ரிலாக்ஸ் செய்ய கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பதில் தவறு கிடையாது. ஓடிக்கிட்டே இருக்கும் சமயத்தில் ஐந்து நிமிடம் உட்காருங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மணமகிழ்ச்சியான நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். பெண் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் நல்ல செய்தி வரும். நல்ல வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வாய்ப்புகள் வீட்டு கதவை தட்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் இக்கட்டான சூழ்நிலை நெருக்கடி நிலவும். எப்பவோ செய்த தவறுக்கு இன்று கேள்விகள் எழும். சிக்கலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க உண்மையை ஒத்துக் கொள்ளுங்கள். பொய் சொல்லி சொல்லி இனி பிரச்சனைகளை பெருசாக்க வேண்டாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்ற பாதையில் செல்வதற்கு நிறைய ஐடியாக்கள் கிடைக்கும். உற்சாகத்தோடு செயல்பட்டு வெற்றி வாகை சூடுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். நீங்கள் நினைக்க முடியாத அளவுக்கு நன்மைகள் உங்களுக்கு நடக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். எதிரிகளை வந்து உங்களிடம் சரண் அடைவார்கள். நீண்ட நாள் கனவு இன்று நிறைவேற வாய்ப்புகள் உள்ளது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். எந்த வேலையையும் செய்யாமல் தூங்கலாம் போல தோணும். ஆனால் வேலைக்கு லீவு போட முடியாது. சொந்த வியாபாரம் செய்பவர்கள், வீட்டிலேயே இருந்தால் வேலைக்கு ஆகாது. அன்றாடம் செய்யக்கூடிய வேலையில் கொஞ்சம் கவனம் எடுத்து செயல்பட்டால் நல்லது. சோம்பேறித்தனத்தை கொஞ்சம் ஒதுக்கி வையுங்க.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தைரியம் கொஞ்சம் குறைவாக இருக்கும். எல்லா விஷயத்துக்கும் பயப்படுவீங்க. யாராவது ஒரு கேள்வி கேட்டால் கூட தடுமாற்றம் இருக்கும். மன பயத்தை போக்க மனதிற்குள் ஸ்ரீராமஜெயம் சொல்லுங்கள். தன்னம்பிக்கை தானாக பிறக்கும். பிறகு எல்லா விஷயத்திலும் வெற்றி காணலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புது வேலைக்கு முயற்சி செய்யலாம். புதுசாக இடமாற்றம் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்கள் பக்கம் சாதகமாக தீர்ப்பாக வாய்ப்புகள் உள்ளது. கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு இன்று கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்திற்காக ஒரு நல்லது செய்வீர்கள். அது உங்கள் பிள்ளைக்காக உங்கள் மனைவிக்காக உங்கள் தாய், தந்தைக்காக யாருக்காக வேண்டும் என்றாலும் இருக்கலாம். ஆனால் குடும்பத்தில் இன்று சந்தோஷம் படும்படியான ஒரு நிகழ்வு நடக்கும். மற்றபடி வேலை அலுவலகம் தொழில் இல்லாவற்றிலும் சுமூகமான நிலை காணப்படும்.