ஆன்மிகம்

கற்றாழை செடியை வீட்டின் எந்த திசையில் வைத்தால் செல்வம் செழிக்கும்ன்னு தெரியுமா?

கற்றாழையில் நிறைய மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. சோற்று கற்றாழையை உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு பல ஆரோக்கியத்தை கொடுக்கும். மேலும், காற்றாழை சாற்றை தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் வெளியேறி குடல் சுத்தமாகும்.

உடலுக்கு குளிர்ச்சியையும் கொடுக்கும். மேலும், உடலில் ஏற்படும் வலி, கட்டி, வீக்கம், சுளுக்கு இவை அனைத்திற்கும் சோற்றுக் கற்றாழை கட்டுப்படுத்தும். இப்படி பல மருத்துவ குணங்களை கொண்ட கற்றாழையை செடியை பலரும் வீட்டின் வாசலில் வைத்திருப்பார்கள்.

கற்றாழை செடியை வீட்டு வாசலில் வைத்தால் வீட்டிற்குள் பாம்பு வராது என்று சொல்கிறார்கள். கிராமங்கள் பாம்புகள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். அதனால், கிராமத்தில் உள்ள மக்கள் கசப்பு நிறைந்த கற்றாழை செடியை வாசல் முன்பு வைப்பார்களாம்.

ஆனால், கற்றாழை செடியை வாஸ்து படி வைத்தால் நிறைய பலன்கள் கொடுக்குமாம். அதனால், கற்றாழை செடியை வீட்டின் எந்த திசையில் வைக்கலாம் என்று பார்ப்போம் –

சோற்றுக் கற்றாழையை வீட்டில் வைத்தால் வீட்டில் அன்பு நிறைந்திருக்குமாம். அதேபோல் வீட்டில் செல்வம் செழிக்குமாம்.

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு, கவுரவம் பெருகுமாம். வாழ்க்கையில் வரும் அனைத்து தடைகளையும் இந்த செடி நீக்குமாம்.

ஒருவர் வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால், அவர் வீட்டின் மேற்கு திசையில் கற்றாழை செடியை வைத்தால் மங்களகரமானதாக செய்தி தேடி வருமாம்.

வீட்டின் தென்கிழக்கு திசையில் கற்றாழை செடியை வைத்தால் பல நன்மைகள் கிடைக்கும். அதேபோல், வீட்டின் கிழக்கு திசையில் கற்றாழை செடியை வைத்தால் மனதிற்கு அமைதி பிறக்கும்.

Back to top button