2023 நவராத்திரி: ஒன்பது நாளும் இதை படைத்தால் வீட்டில் செல்வம் பெருகுமாம்
பெண் தெய்வங்களை கொண்டாடும் நவராத்திரி விரதமானது இவ்வருடம் அக்டோபர் 15 முதல் அக்டோபர் 24 வரை நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு வருடமும் இந்த காலத்திற்காக காத்திருப்பது சைவர்களின் விருப்பம் என்றே கூறலாம். வருகின்ற 9 நாட்களும் திருவிழா போன்று கொழு வைத்து வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.
இந்த விரதக்காலத்தில் தெய்வத்திற்கு படைப்பதற்கு ஒவ்வொரு ஒழுங்குமுறைகள் இருகின்றது. அவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் வீற்றிருக்கும் கடவுள் 9 நாட்களும் மகிழ்ச்சியுடன் இருப்பார் என்பது ஐதீகம்.
ஆகவே ஒன்பது நாட்களும் என்ன படைக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
1ம் நாள்
வெண்பொங்கல், மொச்சை சுண்டல் பிரசாதமாகக் கொடுப்பது நல்லது. இதனால் வறுமை நீங்கி, வளம் பெருகி, ஆயுள் விருத்தி உண்டாகும்.
2ம் நாள்
புளியோதரை, வேர்க்கடலை சுண்டல் பிரசாதமாகக் கொடுப்பது நல்லது. இதனால் நோய்கள் நீங்கி, மனதில் அமைதி கிடைக்கும்.
3ம் நாள்
கோதுமை சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல். இதனால் தானிய விருத்தி உண்டாகி, வாழ்வு சிறப்புப் பெற்று, பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
4ம் நாள்
பலவிதக் காய்களும், பருப்பும் கலந்த கதம்ப சாதம், பட்டாணி சுண்டல் பிரசாதமாக கொடுக்கலாம். இதனால் பகை விலகி, இன்னல்கள் தீர்ந்து இன்பம் சேரும்.
5ம் நாள்
தயிர் சாதம், பூம்பருப்பு சுண்டல் பிரசாதமாக கொடுக்கலாம். இதனால் விரும்பிய செல்வங்களைப் பெறலாம்.
6ம் நாள்
தேங்காய் சாதம், பச்சைபயறு சுண்டல் பிரசாதமாக கொடுக்கலாம். இதனால் கவலைகள் நீங்கி தனம் பெருகும்.
7ம் நாள்
எலுமிச்சை சாதம், கொண்டைக்கடலை சுண்டல் பிரசாதமாக கொடுக்கலாம். இதனால் கல்வி வளர்ச்சியும், ஞான விருத்தியாகும்.
8ம் நாள்
பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்த பருப்பு பாயசத்தை, வடையுடன் பிரசாதமாக கொடுக்கலாம். இதனால் கேட்கும் வரங்கள் எளிதில் கிடைக்கும்.
9ம் நாள்
சர்க்கரைப் பொங்கலில் நெய் அதிகம் சேர்த்த அக்கார வடிசல், வேர்க்கடலை சுண்டலை பிரசாதமாக கொடுக்கலாம். இதனால் குழந்தை வரம் பெறலாம்.
10ம் நாள் (விஜய தசமி)
பால் பாயாசம், காராமணி சுண்டல் மற்றும் இனிப்பு வகைகளை பிரசாதமாக கொடுக்கலாம். இதனால் தீய சக்திகள் அழிந்து, எல்லாக் காரியங்களும் வெற்றி மீது வெற்றி பெறும்.