இலங்கை

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் 14-ஆம் திகதி முதல் நாகப்பட்டினம் – காங்கேயன்துறைக்கு கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேவேளை, நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் பயணம் மேற்கொள்ள கடவுச் சீட்டு கட்டாயம் இருக்க வேண்டுமெனவும், சுற்றுலா விசா பெற்றுக் கொண்டுதான் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் நடைமுறைகளே நாகப்பட்டினம் துறைமுகத்திலும் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒரு பயணி, கப்பல் பயணத்தின் போது தன்னுடன் 50 கிலோ எடையிலான பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார். Ship Service Passengers அதில் 20 கிலோவை பயணி தன்னுடன் வைத்துக் கொள்ளும்படியாகவும், 30 கிலோ கப்பலில் வைக்கக்கூடிய பை என இரண்டாகப் பிரித்து வைத்திருக்க வேண்டும். இந்தியர் கப்பல் பயணத்தில் இலங்கைக்குச் சென்றால் அவர் இந்தியா திரும்புவதற்கான விமானம் அல்லது கப்பல் பயணச் சீட்டை காண்பித்தால் மட்டுமே இலங்கைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார். எனினும், இலங்கையைச் சேர்ந்த பயணிக்கு குறித்த நடைமுறை பின்பற்றப்படாது. விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகள் எப்படி சுங்கத்துறையினரின் ஆய்வுக்கு உட்படுத்தப்படுமோ அதேபோல் கப்பல் பயணத்தின் போதும் ஆய்விற்குட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button