இலங்கை

வவுனியா மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

இன்று இரவு 11.30 மணி வரை மின்னல் தாக்கக்கூடிய சிவப்பு அபாய வலயத்தில் வவுனியா மாவட்டம் இருப்பதனால் மக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , இடியுடன் கூடிய மழை இடியுடன் கூடிய மழையின் போது பொதுமக்கள் நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிப் பகுதிகளில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் மின் சாதனங்களைப் பயன்படுத்துவதையும், சைக்கிள்கள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ. அளவிலான மழை பெய்யும் என்றும், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. இதன்போது ஏற்படும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Back to top button