பயங்கரமான மூட்டு வலியா? ஒரே இரவில் குணமாக இதை செய்தால் போதும்..!
பொதுவாகவே வயதாகும் போது அனைவரும் எதிர்க்கொள்ளும் ஒரு பொது பிரச்சினையாக முழங்கால் வலி , மூட்டு வலி இருகின்றது. இது வந்துவிட்டால் அவ்வளவு தான். அன்றைய நாள் முழுவதுமே அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கும். அடிக்கடி முழங்கால் வலி ஏற்படுவதற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. இது மூட்டுவலி, காயம் அல்லது அதிகப்படியான பயன்பாட்டினால் ஏற்படலாம். ஊட்டசத்து குறைபாடு காரணமாகவும் ஏற்படலாம். எனவே இதை எப்படி வீட்டு வைத்தியங்களால் ஒரே இரவில் நீக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
பிஸ்தா, பாதாம், நிலக்கடலை, கொள்ளு, பாசிப்பயறு என பயறு வகை உணவுகளை சாப்பிட்டு வர மூட்டு வலி குணமாகும்.
கடுகு எண்ணெய், கற்பூரம் சேர்த்து மிதமான சூட்டில் சூடேற்றி வலி இருக்கும் இடத்தில் தடவி வர விரைவில் குணமாகும்.
மாட்டுப்பாலை வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் காலை, மாலை இரு வேளையும் மஞ்சள் தூள், மிளகு தூள் கலந்து குடித்து வர மூட்டு வலி விரைவில் குணமாகும்.
பன்னீர் வைத்து உணவு பொருட்கள் அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம்.
கீரைகளில் இருக்கும் கால்சியம் மூட்டுகளை உறுதியாக்குகிறது. எனவே கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
புளிப்பு சுவையுடைய பழங்கள் வாதத்தை ஏற்படுத்துகிறது. எனவே புளிப்பு சுவையுடைய பழங்களை தவிர்த்துக் கொள்ளலாம்.
கிழங்கு வகைகள், பருப்பு வகைகள், குளிர்ச்சியான பொருட்கள் ஐஸ்கிரீம், ஐஸ் தண்ணீர் ஆகியவற்றை குறைத்துக்கொள்வது நல்லது.