24 மணிநேரத்திற்குள் வெளியேறுங்கள்; இஸ்ரேல் எச்சரிக்கையை தொடர்ந்து இலங்கையர்களுக்கான அறிவுறுத்து
இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்திற்கும் இடையிலான யுத்தம் அதிகரித்து வரும் நிலையில் மத்திய கிழக்கு நாட்டின் வடக்குப் பகுதிகளில் உள்ள இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவசரகால அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றுமாறும் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
லெபனான் மற்றும் சிரியாவின் எல்லைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள நஹாரியா, அக்கோ, ஹைஃபா, திபெரியாஸ் மற்றும் நசரேத் நகரங்கள் தற்போது தாக்குதல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் இறுதிப்போரை நினைவூட்டுகின்றது! மேற்குறிப்பிட்ட நகரங்களில் உள்ள இலங்கையர்கள், மருந்துகள் மற்றும் உணவு உள்ளிட்ட அன்றாடத் தேவைகளை கையிருப்பில் வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை , இஸ்ரேலிய அரசாங்கம் அப் பகுதிகளில் துருப்புக்களை அனுப்பியுள்ளது மற்றும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது என்று தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் இராணுவம் காசாவின் வடபகுதியில் வசிக்கும் மக்கள் தென்பகுதி நோக்கி 24 மணி நேரத்திற்குள் இடம்பெயரவேண்டும் என விடுத்துள்ள உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலிய இராணுவம் அத்தகைய உத்தரவை உறுதிப்படுத்தாத போதிலும், இது வரவிருக்கும் தரைவழித் தாக்குதலைக் குறிக்கும் என்று கூறப்பட்டது. 5 நாடுகளில் இருந்து இலங்கை வர விசா கட்டணமில்லை! 5 நாடுகளில் இருந்து இலங்கை வர விசா கட்டணமில்லை! மேலும் இஸ்ரேல், வியாழன் அன்று, தரைவழித் தாக்குதலுக்குத் தயாரான போதும் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாரிய மனிதாபிமான விளைவுகள் இன்றி இந்த இடப்பெயர்வு இடம்பெற முடியாது என ஐநா தெரிவித்துள்ளது.