ஏனையவை

செட்டிநாடு ஸ்டைல் வாயில் வைத்தவுடன் கரையும் உக்காரை: ரெசிபி இதோ

இந்த செட்டிநாடு ஸ்டைல் உக்காரையை ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுங்கள். தீபாவளி போன்ற பண்டிகைகளில் வழக்கமாக செய்யும் இனிப்புகளுக்கு பதிலாக இந்த சுவையான உக்காரையை செய்து சாப்பிடுங்கள். இந்த செட்டிநாடு ஸ்டைல் உக்காரையை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பாசி பருப்பு- 1 கப், வெல்லம்- 4 கப், நெய், ரவை- 1 கப், ஏலக்காய் தூள்-1 டீஸ்பூன், முந்திரி-15

செய்முறை

முதலில் குக்கரில் பாசி பருப்பை பொன்னிறமாக வறுத்து தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு வேகவைக்கவும். வெல்லத்தை தண்ணீர் ஊற்றி நன்கு கரைந்து பாகு அளவிற்கு காய்ச்சவேண்டும். ஒரு பாத்திரத்தில் 1/2 கப் நெய் ஊற்றி 1கப் ரவை சேர்த்த பொன்னிறமாக வறுக்கவும். உக்காரை அடுத்து வேகவைத்த பாசிபருப்பை இதில் சேர்த்து நன்கு கலக்கவும். இதனைத்தொடர்ந்து வெல்லப்பாகை இதில் வடிகட்டி கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த கிளறவேண்டும். இறுதியாக இதில் 1/2 கப் அளவு நெய், 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள் மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கினால் சுவையான உக்காரை தயார்.

Back to top button