உடல்நலம்

உடல் எடையை கிடுகிடுவென குறைக்கும் கொள்ளு ரசம் : செய்வது எப்படி?

மலிவான விலையில் கிடைக்கும் கொள்ளுவில் எண்ணற்ற தாதுப்பொருட்கள் அடங்கியுள்ளன. கொள்ளு நீர் குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு, கண் சார்ந்த நோய்கள் குணமாகும். மேலும், வெள்ளைப்போக்கை கட்டுப்படுத்தும். உடல் எடையை குறைக்க கொள்ளு பெரிதும் பயன்படுகிறது.

உடல் எடை குறைக்க விரும்புவோருக்கு கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் –

தேவையான பொருட்கள் –
கொள்ளு – 50 கிராம்

மஞ்சள் தூள் – 3 சிட்டிகை

பெருங்காயம் – தேவைக்கேற்ப

சீரகம் – அரை ஸ்பூன்

தக்காளி – 1

புளி – தேவைக்கேற்ப

உப்பு – தேவைக்கேற்ப

மிளகு – அரை ஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

கறிவேப்பிலை – தேவைக்கேற்ப

பூண்டு – 3 பல்

நல்லெண்ணெய் – 3 ஸ்பூன்

கடுகு – சிறிதளவு

செய்முறை
கொள்ளை நன்றாக சுத்தம் செய்து, பத்திரத்தில் போட்டு லேசாக வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், மிக்ஸியில் கொள்ளை தனியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதன் பிறகு மிக்ஸியில், தக்காளி, பூண்டு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில், 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில், கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த விழுதையும், அரைத்த கொள்ளையும் அதில் போட்டு வாசம் போகும்வரை நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர், மஞ்சள்தூள், பெருகாயத்தூள் சேர்த்து, அதில் புளி கரைசலை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

நுரை வந்ததும் உடனே அடுப்பை அணைத்துவிட வேண்டும். ஆரோக்கியமான கொள்ளு ரசம் ரெடி.

இதை வாரத்திற்கு 3 நாட்கள் சேர்த்து வந்தால் உடல் எடை கிடுகிடுவென குறையும்.

Back to top button