இலங்கை

திருகோணமலையில் இடம்பெற்ற கோர விபத்தில் 14 வயது சிறுவன் பலி

திருகோணமலை நோக்கி கெலிஓயாவில் இருந்து பயணித்த புகையிரதத்தில் அடிபட்டு 14 வயது மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். தம்பலகமுவ மொல்லிப்பொத்தானை புகையிரத நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கெலிஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மாணவன் மோதுண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மொல்லிப்பொத்தானை பிரதேசத்தில் வசித்து வந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். தம்பலகமுவ பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button