ஆன்மிகம்

பிரச்சினைகளைத் தீர்க்கும் வெற்றிலைப் பரிகாரம்

ஒருவருடைய வாழ்க்கையில் பலதரப்பட்ட பிரச்சனைகள் இருக்கும்.

பிரச்சனைகள் நிறைந்தது தான் வாழ்க்கை என்று கூட பலரும் கூறுவார்கள்.

அந்த பிரச்சனைகளில் இருந்து வெளியில் வருவதற்கு பலதரப்பட்ட முயற்சிகளை செய்வார்கள்.

அந்த முயற்சிகளை செய்தும் பிரச்சனையிலிருந்து வெளியில் வர இயலாதவர்கள் அந்த முயற்சிகளோடு சேர்த்து ஒரு சில பரிகாரங்களையும் செய்ய வேண்டும்.

அப்படி செய்யக்கூடிய ஒரு எளிய பரிகாரமாக தான் வெற்றிலை பரிகாரம் திகழ்கிறது.

வெற்றிலை பரிகாரம்
நாம் தெய்வங்களை வழிபடும் பொழுது தெய்வங்களுக்கு பிடித்தமான பொருட்களை வைத்து வழிபடுவோம்.

அப்படி வழிபடும் பொழுது தெய்வங்களின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்முடைய நம்பிக்கையாக திகழ்கிறது.

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சனைக்கு காரணமாக திகழ்வது பணம் தான்.

பணம் ரீதியான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நமக்கு மகாலட்சுமி தாயார் அருள் புரிவார்.

அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாருக்கு பிடித்தமான பொருட்களுள் ஒன்றுதான் வெற்றிலை.

வெற்றிலையை நாம் மகாலட்சுமி தாயாருக்கு வைத்து வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய பிரச்சனைகள் தீர்வதற்குரிய வழிகள் கிடைக்கும்.

இந்த பரிகாரத்தை ஆரம்பிக்கும் நாள் என்பது வளர்பிறை சுபமுகூர்த்த நாளாக இருக்க வேண்டும்.

இந்த பரிகாரத்தை மாலை நேரத்தில் தான் செய்ய வேண்டும். அதுவும் தொடர்ச்சியாக உங்களுடைய பிரச்சனைகளும் பண தேவைகளும் பூர்த்தியடையும் நாள் வரை இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்திற்கு நமக்கு வெற்றிலையும், கொட்டை பாக்கும், நாணயமும் தேவைப்படும். மாலை நேரத்தில் அனைவரின் இல்லங்களிலும் விளக்கேற்றும் பழக்கம் என்பது இருக்கும்.

அப்படி விளக்கேற்றும் பொழுது மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக ஆறு வெற்றிலைகளை வைக்க வேண்டும்.

அதற்கு மேல் மூன்று கொட்டை பாக்கை வைத்து அதனுடன் ஒரு நாணயத்தை வைக்க வேண்டும். இந்த நாணயம் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் அல்லது இருபது ரூபாய் என்று எந்த நாணயமாக இருந்தாலும் பரவாயில்லை.

இப்படி வைத்துவிட்டு மகாலட்சுமி தாயார் இடம் உங்களுடைய பிரச்சனைகள் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.

மறுநாள் இந்த வெற்றிலையை எடுத்து தாங்கள் உண்ணலாம் அல்லது பிறருக்கு கொடுக்கலாம். மறுநாள் மாலை இதே போல் புதிதாக ஆறு வெற்றிணைகளையும் கொட்டை பார்க்கையும் புதிதாக ஒரு நாணயத்தையும் வைக்க வேண்டும்.

பழைய நாணயத்தை வீட்டு செலவிற்காகவோ அல்லது அதை சேர்த்து வைத்து கோவில் செலவிற்காகவும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒவ்வொரு நாளும் இப்படி புதிதாக வைத்து மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும்.

இந்த முறையில் தொடர்ச்சியாக மகாலட்சுமி தாயாரை யார் ஒருவர் வழிபட்டுக் கொண்டே வருகிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறைய ஆரம்பித்து பண தேவைகளும் பூர்த்தியடையும்.

Back to top button