சுவிட்சர்லாந்து

சுவிட்ஸர்லாந்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

சுவிட்ஸர்லாந்து வாழ் மக்கள் அங்கு அதிகரித்துவரும் மருத்துவம் தொடர்பான செலவுகள் குறித்து அதிகம் கவலைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டு மக்களில் 80 சதவீதமானவர்கள் மருத்துவக் காப்பீட்டு தொகை அதிகரித்து வருவதே தங்களுக்கு கவலையை ஏற்படுத்தும் முக்கிய விடயம் என்று கூறியுள்ளானர். நாடு முழுவதும் அனைத்து வயதினருக்கும் இந்த கவலை உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இது மட்டுமன்றி பணவீக்கம், வீடு மற்றும் ஓய்வூதியம் ஆகியவையும் கவலையை ஏற்படுத்தும் விடயங்களாக அமைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. சுற்றுச்சூழல் தொடர்பான விடயங்களை தவிர்த்து பொருளாதார ரீதியிலான விடயங்களுக்கே சுவிஸ் நாட்டவர்கள் அதிகம் கவலையடைவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Back to top button