உடல் எலும்புகள் வலிமை பெற சுவையான பிரண்டை துவையல்
நாம் உணவில் சேர்க்கும் பிரண்டையில் அதிகப்படியான மருத்துவ நன்மைகள் உள்ளன. தினமும் காலையில் பிரண்டை சாற்றில் 6 தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் சீராகும். தொடர்ந்து பிரண்டை சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் சரியாகும். வாரத்திற்கு இரண்டு நாட்கள் பிரண்டை துவையல் சாப்பிட்டு வந்தால் உடல் எலும்புகள் வலிமைபெறும். சரி சுவையான பிரண்டை துவையல் செய்வது எப்படி என்று பார்ப்போம் –
தேவையான பொருட்கள் – பிரண்டை – 2 , உளுத்தம்பருப்பு – 4 ஸ்பூன், பூண்டு – 20 பல், நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப, உப்பு – தேவையான அளவு, கடுகு – அரை டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் – தேவைக்கேற்ப, இஞ்சி – 2 துண்டு, காய்ந்த மிளகாய் – 6, தேங்காய் – 2 துண்டு, புளி – தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் பிரண்டையை நன்றாக சுத்தம் செய்து, அதன் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் முதலில் நல்லெண்ணெய்யை ஊற்றி அதில் நறுக்கிய பிரண்டையை நன்றாக பச்சை வாசம் போகும்வரை வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், உளுத்தம்பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பூண்டை போட்டு நன்றாக வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், தேங்காய் துண்டுகளை வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு, இஞ்சி மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்தெடுக்க வேண்டும். வறுத்தெடுத்த அனைத்து பொருட்களையும் நன்றாக ஆற விட வேண்டும். ஆறிய பிறகு, ஒரு மிக்ஸியில் அனைத்து கலவையும் சேர்த்து அதனுடன் உப்பு, புளி, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக விழுதாக அரைத்தெடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சிறிதளவு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு மிக்ஸில் அரைத்த விழுதை சேர்த்தால் சுவையான பிரண்டை துவையல் ரெடி.