இலங்கை

யாழில் அதிகரித்த போதைப் பாவனையால் தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர்

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவணைக்கு அடிமையான குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். தனது சகோதரி மற்றும் தாயாரிடம் நேற்று (18.02.2024) பணம் கேட்ட குடும்பஸ்தருக்கு வீட்டார் பணம் கொடுக்காததால் இவ்வாறு தவறான முடிவெடுத்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த நபருக்கு திருமணமாகி 05 வயதில் பிள்ளை இருக்கும் நிலையில், அதீத போதைப்பொருள் பாவனையால் குடும்ப அங்கத்தவர்களோடு வன்முறைகளிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் அவரது மனைவி மற்றும் பிள்ளை அவரை விட்டு பிரிந்து வாழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Back to top button