ஏனையவை

எளிமையான முறையில் நாவில் எச்சில் ஊற வைக்கும் அதிரசம்: வெறும் இரண்டு நிமிடமே போதும்!

பொதுவாகவே தீபாவளி என்றாலே அனைவரும் இனிப்பு வைத்து தான் ஆரம்பிப்பார்கள். அதற்காக வீட்டில் பல பலகாரங்களையும் செய்வது வழக்கம். ஆகவே இலகுவான முறையில் எப்படி அதிரசம் செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1/2 கிலோ

பாகு வெல்லம் 1/2 கிலோ

தேவையான அளவு எண்ணெய்

செய்முறை
முதலில் பச்சரிசியை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவி, நான்கு மணிநேரம் ஊற வைத்து வடிக்கட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின் அதை அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அரைத்த அரிசியை சல்லடையில் போட்டு சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1/2 கிலோ அளவு வெல்லம் மற்றும் தண்ணீர் ஊற்றி கிளறிக் கொள்ள வேண்டும்.

அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக பாகில் சேர்க்க வேண்டும்.

மாவை பாகில் கட்டி பிடிக்காமல் கலந்து விட்ட பிறகு தேவைப்பட்டால் ஏலக்காய் தூள் சேர்க்கலாம்.

இந்த மாவை அப்படியே 8 மணி நேரம் வரை ஆற விட வேண்டும்.

பின் ஒரு தட்டில் மா சேர்த்து தட்டையாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

இறுதியாக எண்ணெயில் பொறித்து எடுக்க வேண்டும்.

Back to top button