யாழில் தாலியோடு மாயமான நகைக்கடைக்காரர்; பரிதவித்த மாப்பிள்ளை!
யாழில் தாலிக்கொடி செய்து தருவதாக கூறி 12 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்துடன் தாலி செய்தவர் தலைமறைவான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் , திருமணத்திற்கு தாலி செய்து தருவதற்காக குறித்த நபரிடம் ஒரு தொகை நகை மற்றும் பணம் என்பவற்றை மணமகன் வீட்டார் வழங்கியுள்ளனர்.
இவ்வாறு நகை செய்வதற்காக அவற்றின் பெறுமதி 12 இலட்ச ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது. நகை மற்றும் பணத்தினை பெற்றுக்கொண்டவர் திருமணத்திற்கு முதல் நாள் தாலியை தருவதாக உறுதி அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், திருமணத்திற்கு முதல் நாள் தாலியை வாங்க சென்ற போது , அவரது கடை மூடப்பட்டு இருந்தது.
திகைத்த மாப்பிளைவிட்டார் அவருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த போது , தொலைபேசியும் துண்டிக்கப்பட்டு இருந்தது.
அதனை அடுத்து மணமகன் வீட்டார் , பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது.