இலங்கை
மின்சார சபையினால் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்!

மின் இணைப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் புதிய திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மின்சார பயனாளர்கள் புதிய மின் இணைப்புக்களை பெற்றுக்கொள்ளும் போது அதற்கான வைப்பு பணத்திற்கு வட்டிப்பணம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நுகர்வோர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. குறித்த திட்டம் இலங்கை மின்சார சபையினால், இந்த மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.