இலங்கை

அரசாங்கத்தினால் பொது பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு புதிய திட்டம் அறிமுகம்!

இலங்கையில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு விசேட கற்கைநெறியை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (17.07.2023) இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் டிப்ளோமாக்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எதிர்காலத்தில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் வரை சுமார் மூன்று மாதங்களில் குறித்த பாடசாலைகளில் தொழில்சார் கற்கைநெறியை கற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும். உயர்தரம் படிக்காவிட்டாலும் அவர்களின் எதிர்கால தொழில் வாழ்க்கை குறித்து ஓரளவு பாதுகாப்பைப் பெற முடியும் என்பதற்காகவே இவ் வேலைதிட்டம் நடைமுறைப்படுத்தவுள்ளது என தெரிவித்துள்ளார்.

Back to top button