ஏனையவை
யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்!
யாழ் புறநகர் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதலானது நேற்று (21.11.2023) இரவு யாழ். ஒஸ்மானியா வீதியில் உள்ள வீடொன்றின் மீதே மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீட்டின் கதவு , வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் என்பவற்றின் மீது பெற்றோலை ஊற்றி தீ வைத்த பின்னர் வீட்டின் வளவுக்குள் பெற்றோல் குண்டு ஒன்றினை வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.