பிரித்தானிய உள்துறை அலுவலகம் மீண்டும் அகதிகளுக்கு உருவாக்கியுள்ள ஒரு சிக்கல்!
ஆயிரக்கணக்கான அகதிகள் வீடற்றவர்களாக சாலையோரம் தங்கும் நிலையை உருவாக்கியுள்ளது பிரித்தானிய உள்துறை அலுவலகத்தின் கொள்கை மாற்றம் ஒன்று. கடந்த மாதம் வரை, அகதிகளும், மனிதக் கடத்தலுக்கு தப்பியவர்களும், தங்களுக்கு தங்குமிடத்துக்கான மாற்று ஏற்பாடு செய்யும்வரை, உள்துறை அலுவலகம் ஏற்பாடு செய்யும் தங்குமிடங்களில் 28 நாட்கள் தங்கியிருக்கலாம் என்ற நிலை இருந்தது. தற்போது, உள்துறை அலுவலகத்தின் அந்தக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி, அகதிகள், உள்துறை அலுவகம் ஏற்பாடு செய்யும் தங்குமிடங்களில், ஏழு நாட்கள் மட்டுமே தங்க அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அகதிகள் தங்கள் தங்குமிடத்துக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை உள்துறை அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள தங்குமிடங்களில் 28 நாட்கள் தங்க அனுமதியளிக்கப்பட்டிருந்தபோதே, அதுவே குறைவு, 56 நாட்களாவது அவர்களை உள்துறை அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள தங்குமிடங்களில் தங்க அனுமதிக்கவேண்டும் என தொண்டு நிறுவனங்கள் கோரியிருந்தன. ஆனால், இருந்த 28 நாட்களையும் குறைத்து, ஏழு நாட்களாக்கியுள்ளது உள்துறை அலுவலகம். குழந்தைகளுடன் இருக்கும் குடும்பங்களுக்கு கவுன்சில்கள் தங்க இடம் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆக, பிள்ளைகள் இல்லாத தனி நபர்கள் தெருக்களில் தங்கும் ஒரு நிலை உருவாகியுள்ளது.