இலங்கை
இலங்கை மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கும் அரிய வாய்ப்பு!

இலங்கையர்களை வேலைவாய்ப்பிற்காக நாட்டிற்குள் உள்வாங்கும் திட்டத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அடையாளம் காணப்பட்ட தொழில் துறைகளில் உள்ள இடைவெளிகளை பூர்த்தி செய்வதற்காக திறமையான புலம்பெயர்ந்தோர் நாட்டிற்குள் உள்வாங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள, தகுதியுடைய இலங்கையர்கள் https://www.smartmoveaustralia.gov.au/என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விடயத்தை மெல்பேர்னில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

